கூகுள், ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து சராஹா ஆப் நீக்கம்- காரணம் என்ன?

அதிக தொந்தரவு அளிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சராஹா செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்கள் ஸ்டோர்களில் இருந்து நீக்கியுள்ளது.

யார் நமக்கு செய்தி அனுப்பியது என்ற தகவலை வெளியிடாது, அனுப்பிய குறுஞ்செய்தியை மட்டுமே நம்மால் படிக்க முடியும் என்ற வசதி கொண்டதுதான் சராஹா ஆப். அதனைதான் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் நீக்கியுள்ளன.