honor V10 Smartphone 5.99-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் வி10

 
ஹவாய் நிறுவனம் புதிய ஹானர் வி10 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் வரும் டிசம்பர் 5 ம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ஹானர் வி10 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கைரேகை சென்சார் போன்றவை இவற்றில் இடம்பெற்றுள்ளது.
 
ஹானர் வி10 : ஹானர் வி10 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.