ஸ்னாப்டிராகன் 425 செயலியுடன் வெளிவரும் ரெட்மி 5ஏ.சியோமி நிறுவனம் புதிய ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் மாடலை இந்திய மொபைல் சந்தையில் வரும் நவம்பர் 30-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் மலிவு விலையில் விற்பனைக்கு வருவதால் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.