இந்தியில் காவலன் ரீமேக்

இந்தியில் காவலன் ரீமேக்


"காவலன்" படத்தை இந்தியில் எடுத்து வருகிறார் டைரக்டர் சித்திக். இந்த படத்திற்கு "மை லவ் ஸ்டோரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

டைரக்டர் சித்திக் இயக்கத்தில் விஜய்-அசின் நடித்துள்ள படம் "காவலன்". பொங்கல் அன்று காவலன் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தபடம் மலையாள படமான "பாடிகார்ட்" படத்தின் ரீமேக் ஆகும். ஏற்கனவே இரண்டு மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. டைரக்டர் சித்திக்கே இந்த படத்தை இயக்குகிறார். "மை லவ் ஸ்டோரி" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தபடத்தில் சல்மான் கான், கரீனா கபூர் நடிக்கின்றனர்.

ஜனவரி 17ம் தேதி முதல் படப்பிடிப்பிற்கான வேலையை ஆரம்பித்துவிட்டார் டைரக்டர் சித்திக். சல்மான் கானின் மச்சினன் அதுல் அக்னிஹோத்ரி தயாரிக்கிறார். ரிலையன்ஸின் பிக் பிக்சர்ஸ் படத்தை திரையிடுகிறது. படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் படத்தை திரையிட உள்ளனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களை தேர்வு செய்து நடிக்கிறார் சல்மான். இதற்கு முன்னர் விஜய் நடித்த ‌"போக்கிரி" படம் இந்தியில் "வான்டட்" என்ற பெயரில் ரிலீசானது. இதில் ஹீரோவாக சல்மான் நடித்திருந்தார். இந்தபடம் இவரது கேரீயரை மேலும் உயர்த்தியது. "வான்டட்" வெற்றியை தொடர்ந்து "மை லவ் ஸ்டோரி" யும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளார் சல்மான்.