எந்திரன் -குட்டி செய்திகள்

 ஐஸ்வர்யாராய் ஹீரோயினாக நடித்த எந்த தமிழ்ப்படமும் சூப்பர்ஹிட் ஆனதில்லை. ஜீன்ஸ் படம் ஷங்கருக்கே லேசான சறுக்கல்தான். இருவர் மணிரத்னத்தின் நல்ல முயற்சி என்றாலும் கமர்ஷியல் ஹிட் இல்லை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் நல்ல கதை, ஆனால் ஓடலை.முக்கியக்காரணம் அதில் அஜித்துக்கு ஜோடியாக போடாமல் அப்பாஸ்க்கு ஐசை ஜோடியாகப் போட்டது என பலர் சொன்னார்கள். ராவணன் அட்டர்ஃபிளாப். இத்தனையையும் மீறி ஐஸ் நடித்த முதல் மெகா ஹிட் தமிழ்ப்படம் எந்திரன்.