கோவலன்

அடுத்து வரும் காதைகளான இந்திர விழவு ஊர் எடுத்த காதை, கடலாடு காதை, கானல் வரி, வேனிற் காதை ஆகியவற்றில் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் நாம் இங்கு தேடிக் கொண்டிருக்கும் கேள்விகளுக்கான மறுமொழிகள் கொண்டவை அல்ல. இந்திர விழவு என்பது சித்திரை மாத முழு நிலவில் தொடங்குகிறது. எத்தனை நாள் நடந்திருக்கும் என்று சிலம்பின் வழி சொல்ல முடியவில்லை. பொதுவாக நம்மூரில் திருவிழாக்கள் என்பவை 10 நாட்கள் அளவில் நடைபெறுவது உண்டு. ஆனால் இது 28 நாட்கள் நடந்ததாக மணிமேகலைக் காப்பியத்தின் மூலம் அறிகிறோம். இந்த இந்திர விழவிலும், மாதவி நடனம் ஆடுகிறாள். ஆடிய நாளின் அதே மாலையில் கோவலனும் மாதவியும் கடலாடுகிறார்கள்; அதன்பின் ஓய்வாக இருந்த நேரத்தில் கானல் வரி எழும்புகிறது.


More
கோவலன் கோவலன் Reviewed by RitchieStreet.co.in on 9/03/2008 06:25:00 AM Rating: 5
Powered by Blogger.