பிரகலாதா

Old பிரகலாதா-1933

New பிரகலாதா-1967

தமிழ் திரையுலகில் ஆரம்ப கட்டத்தில் புராண படங்கள்தான் படமாக்கப்பட்டு வந்தன.
பின்னர் கர்ண பரம்பரை கதைகளும், வரலாற்று படங்களும், ராஜா, ராணி கதை படங்களும் தயாரிக்கப் பட்டன. காலம் செல்ல செல்ல இத்தகைய ராஜா, ராணி கதைகளுக்கு பதிலாக சமூக கதைகள் படமாக்கப்பட்டன.
.
அவ்வப்போது சம்பூர்ண ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண படங்கள் தலைகாட்டின.
ஏ.பி.நாகராஜன் திருவிளையாடல் படத்தை எடுத்த பின்னர்தான், புராண படங்களுக்கு மவுசு கூடியது. திருவிளையாடலை அடுத்து "சரஸ்வதி சபதம்', "கந்தன் கருணை', "திருவருட் செல்வர்' என ஏ.பி.நாகராஜன் புராண படங்களை எடுத்து வெற்றி கண்டார்.

இந்த கால கட்டத்தில் ஏவி.எம். நிறுவனத்தார் வண்ணத்தில் தயாரித்த புராண படம்தான் "பக்த பிரக லாதா'. அது "அன்பே வா' படத்திற்கு பிறகு ஏவி.எம். வண்ணத்தில் தயாரித்த 2வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாராயணனின் அருள் பெற்ற பிரகலாதன், நாராயணனை எதிரியாக பாவிக்கும் இரணியகசிபு வின் ஒரே மகன். சத்துருவின் நாமத்தை இமை பொழுதும் விடாமல் உச்சரிக்கும் மகனை மாற்ற இரணியன் செய்யும் முயற்சிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக மாறுகிறது.
இதையடுத்து தன் ஒரே மகன் என்றும் பாராமல் பிரகலாதனை பல வழிகளிலும் தீர்த்துக் கட்ட இரணியன் முயற்சிக்கும் போதெல்லாம் நாராயண மந்திரம் அவனை காக்கிறது.
இறுதியில் நரசிம்ம அவதாரம் எடுத்து நாராயணன் இரணியனை வதம் செய்து பட்டத்தை பிரகலாதனிடம் ஒப்படைப்பதுதான் கதை.

இந்த கதையை ஏவி.எம். தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழி களில் ஒரே சமயத்தில் தயாரித்த னர். இந்த படத்தில் தந்திரக் காட்சிகள் பல அமைக்கப் பட்டன. இத்தகைய தந்திரக் காட்சிகளை படமாக்குவ தில் கைதேர்ந்த பாபுபாய் மிஸ்திரியின் உதவியாளர் ரவிகாந்த் நிகாய்ச் தந்திர காட்சிகளை எடுத்தார். இரணியனாக எஸ்.வி. ரங்காராவ், அவரது மனைவியாக அஞ்சலி தேவி, சிறுவன் பிரகலாதனாக பேபி ரோஜா ரமணி ஆகியோர் நடித்தனர்.

மூன்று மொழியிலும் புகழ் பெற்ற இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா நாரதர் வேடத்தில் தோன்றி நடித்து பாடினார். அந்த வேடம் அவருக்கு நன்கு பொருந்தியது. நாரதருக்கே உரிய நகைச்சுவையுடன் அவர் வசனம் பேசி நடித்தார்.

அவர் நடித்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது. பிரகலாதனாக பேபி ரோஜா ரமணி மிக அற்புதமாக நடித்தார். பிரகலாதனின் தாயாக நடித்த அஞ்சலிதேவி, கணவருக் கும், மகனுக்கும் இடையே தவிக்கும் பாசப் போராட் டத்தை தனது சிறந்த நடிப்பால் வெளிப்படுத்தினார்.

தெலுங்கிலிருந்து தமிழில் டப்பிங் செய்யப்பட்ட பக்த பிரகலாதா, டப்பிங் படம் போல தெரியாமல் இருப்பதற் காக நகைச்சுவை காட்சிகள் தமிழ் வசனங்களுடன் எடுக்கப்பட்டன.
தெலுங்கில் ரேலங்கி, பத்மநாபன் ஆகியோர் நடித்த நகைச்சுவை பாத்திரங்களில் தமிழில் டி.எஸ்.பாலை யாவும், ஏ.கருணாநிதியும் நடித்தனர். அவர்கள் பிரகலாதனின் உபாத்தியர்களாக வந்து அவனுக்கு ஓம் இரணியாய நமஹ என்று சொல்லி கொடுப்பார்கள். இதை பிரகலாதன் ஓம் நாராயணாய நமஹ என்று திருப்பி சொல்லி அதை ஆசிரியர்களே சொல்லும்படி செய்து விடும் காட்சி பலத்த சிரிப்பை வரவழைத்தது.

இதே போல இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட படத்தில் ராஜேந்திர நாத்தும், தூமலும் நடித்தனர். இந்த நகைச்சுவை காட்சிகளால் பக்த பிரகலாதா தமிழ் படம் போலவே இருந்தது. பழம் பெரும் இயக்குனர் சி.எச்.நாராயணமூர்த்தி படத்தை இயக்கி இருந்தார்.
படத்திற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்தார். "நாராயண மந்த்ரம் அதுவே நாளும் பேரின்பம்' என்ற பாடல் பி.சுசீலாவின் இனிமையான குரலில் தேன் மதுரமாக அனைவரின் காதுகளிலும் ஒலித்த பாடலாகும்.
படத்தின் இறுதியில் இரணியனை நரசிம்ம மூர்த்தி
வதம் செய்யும் காட்சி மிகவும் திரில்லிங் ஆக அமைந்திருந்தது.
1967ம் ஆண்டு பொங்கல் நாளில் பக்த பிரகலாதா (தெலுங்கு) வெளியானது. அதன் தமிழ் பிரதி
24.3.1967 அன்று வெளியாகி நன்றாக ஓடியது.
பா. காசிவிஸ்வநாதன்
பிரகலாதா பிரகலாதா Reviewed by RitchieStreet.co.in on 9/03/2008 06:35:00 AM Rating: 5
Powered by Blogger.